நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 13 ஏப்ரல், 2013

உனக்கென அழுகின்றேன்...!


எழுதவில்லை அவன்பற்றி
மூச்சுக்குள்  முழுவதுமாய்
பழுசுமந்து கூழிட்ட
உழுதவன் கைபிடித்து
தொழுததில்லை ஒருநாளும் ....!


காலக் கணிப்பறிந்து
கடிமண்ணை பூவாக்கி
சேறுக்குள் சுழியோடி
நீருக்குள் விளைவித்து
பட்டினியில் பசுமை கண்டான்
பாருக்கு பசிதீர்க்க ...!

முதுகுவலி முட்டுகையில்
களையெடுத்த காலத்தில்
விழிகளுக்குள் அவன் விட்ட
வியர்வை நம் சோற்றினிலே
விக்கல் எடுக்குங்கால்
விளங்கிக்கொள் நீர் விடுத்து ,,!

பாட்டிசைத்து பயிரிட்ட
பசுமை வயல் வீடாகி
நாகரிக மாற்றத்தால்
நடுத்தெருவில் விவசாயி
ஏர்பிடித்த கரங்களுக்குள்
ஏக்கங்கள் சுமக்கின்றான்...!

நாற்காலி தேடுகின்ற
தற்கால அரசியலில்
ஏற்காட்டு ஏக்கங்கள்
நீர்க்கோடு போலின்று
நிலையிழந்து உயிர்ப்பிழக்க
திக்கற்றான் விவசாயி...!

தாய்மண்ணின் கருவறையில்
தவழுகின்ற பயிர்குழந்தை
தாகமின்றி வாழ்ந்திருக்க
தொப்புள் கொடியாகி
தொடரணுக்கள் ஊட்டியவன்
தொலைகின்றான் தொழிலறுந்து ...!

ஒருநிமிடம் அழுகின்றேன்
உனக்கென வடிவதனால்
உபரியல்ல உயிர்நீர்தான்
ஊனமுலகிர்க்கு உனக்கல்ல
ஈனப்பிறவி இல்லை நீ
எதிர்த்து நில் எம் தோழா....!

ப்ரியமுடன் சீராளன்

7 கருத்துகள்:

  1. நிச்சயம் ஒரு நாள் இவர்களின் முக்கியத்துவம்
    அனைவர்க்கும் தெரிய வரும், அந்நாள் அடுத்த வேலை உணவில்லாத நாளாகவும் இருக்கலாம். அன்று புரிவான் மனிதன் வாழ்வின் ஆதாரம் யாரென்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பிரியா

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

      நீக்கு
  2. ''..காலக் கணிப்பறிந்து
    கடிமண்ணை பூவாக்கி
    சேறுக்குள் சுழியோடி
    நீருக்குள் விளைவித்து
    பட்டினியில் பசுமை கண்டான்
    பாருக்கு பசிதீர்க்க ...!''
    உழவின் பெருமை. அருமை...அருமை
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

      நீக்கு
  3. காலக் கணிப்பறிந்து
    கடிமண்ணை பூவாக்கி
    சேறுக்குள் சுழியோடி
    நீருக்குள் விளைவித்து
    பட்டினியில் பசுமை கண்டான்
    பாருக்கு பசிதீர்க்க ...! முதுகெலும்பே அவர்கள் தான் என்பதை பலர் உணர்வதில்லை தான். சோறு போடும் உழவர்க்கு ஊறு செய்தல் தவறு என்று உணரும் காலம் வரும்
    அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  4. தங்கள் வலையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்
    http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் !


    வலைச்சரத்தில் பார்த்தேன் என்னை அறிமுகம்
    செய்திருக்கின்றீர்கள் மிக்க நன்றி நவ்சின்
    வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு