பிரிவைத்தேடும்
பிரியமானவர்களே
நீங்கள் என்ன
பேசாத ஓவியங்களா
உங்கள் உதிரத்தில்
ஸ்பரிசங்கள் தீண்டாத
உயிர் அணுக்களா
கலந்திருக்கின்றன
எதுவானாலும் சொல்லுங்கள்
உங்களைவிட்டு
உயரப்பறக்கிறேன்
அதற்காக
வானம்பாடி அல்ல நான்
உள்ளூரில் ஓலமிடும்
ஊர்க்குருவிதான்
சிறகுகள் சிறிதெனினும்
உறவுகள் ஓராயிரம் கொண்டவன்..!
நட்பும் வேண்டாம்
நளினமும் வேண்டாம்
எதிரியைப்போல் எனிலும்
எட்டியாவது பாருங்கள்
உறுதி செய்கிறேன்
தெரிந்தவர்கள் என்று
பழகிய விழிகளுக்காவது
பாவவிமோசனம் கிடைக்கட்டும்.
அந்நிய தேசத்தில்
அநாதரவான என் கால்கள்
திசைகள் மறந்து போனது
தீண்டாமை பேணும்
நட்பின் சாரல்களால்
ஆர்ப்பரிக்கும் அலைக்கும்
அடம்பிடிக்கும் பிள்ளைக்கும்
விலகி இருப்பதுதான் தீர்வு
ஆதலால் விலகிக்கொள்கிறேன்
உணர்வுகளை நேசிக்கும்
உயிர்களைதேடுகின்றேன்
ஓட்டுக்கேளுங்கள்
உங்கள் ஆன்ம அசைவுகள் சொல்லும்
அழகிய வாழ்வின்
அர்த்தங்களையும்,அற்புதங்களையும்
உணர்ந்துகொண்டால்
திரும்பிப்பாருங்கள்
இந்த உலகமே
உங்களுக்காய் காத்திருக்கும்
தலைவணங்கியபடியே
ஆனால்
நான் மட்டும் தொலைந்திருப்பேன்
தடயங்கள் ஏதுமின்றி...!
பிரியமுடன் சீராளன்
உறவுகள் ஓராயிரம் கொண்டவன்..!
பதிலளிநீக்குmmmm.....good.
Vetha. Elangathilakam
மிக்க நன்றி சகோ
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
வாழ்கவளமுடன்
மரபின் மிடுக்குடன் மிளிரும் புதுக் கவிதைள்.
பதிலளிநீக்குஇனிக்கின்றது தோழரே!