நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 13 ஏப்ரல், 2013

நாளைய பொழுதில்....!



பிறப்பினில் சிறப் பிழக்கும்
பேதைமனம் கலங்கி நிற்கும்
உறவு சொல்ல வழியின்றி
உள்ளங்கள் ஊமையாகும்..!


கடந்துபோகும் நதிகளிலே
கைகழுவும் நாணல்களாய்
கரைந்துவரும் கண்ணீரில்
கால்நனைக்கும் எதிர்காலம்....!

மானுட வேதங்கள்
வர்ணபேதங்களில் தலைமுழுகும்
சம்ரதாய சடங்குகள்
சாஸ்த்திரங்களை சாகடிக்கும்..!

விழியசைக்கும் நிமிடத்தில்
விலைபோகும் மனச்சாட்சி
விதிவழி தடுமாறி
விலங்கினத்தை உறவுகொள்ளும்..!

தேடலின் தவிப்புகளில்
விடலைகள் தடுமாறும்
கூடலை நிஜமென்று
குற்றுயிராய் இனம் அழிக்கும்..!

பயனிலைகள் தவறி விடும்
பாடுபொருள் பழிசுமக்கும்
இலக்கண யாப்புக்கள்
இடம் மாறி மெய்மறைக்கும்..!

அலையுற்ற கரைகளில்
நிலையற்ற நுரைகளாய்
காற்றோடு கரையும்
காந்திய வாதம்..... !

ஆலயமணி கேட்க
ஆன்மாக்கள் வெறுப்படையும்
ஆன்மீக ராகங்கள்
அகிலத்தில் ஓய்வடையும்..!

கணனித் திரைகள் மட்டும்
கண்கண்ட தெய்வமாகும்
கால்படா தேசங்கள்
காந்தமுனை வரைநீளும்.. .!

 நாளைய பொழுதின்
 நவீன தெருக்களிலே  
பண்பாடு துகிலுரிந்து
பாதைகளை.அலங்கரிக்கும்....!

மாற்றங்கள் வேண்டுகின்ற
மானிட உருவங்கள்
அநீதிக்கே அடிமையாகி
அன்பிலாராய் உருமாறும்....!

பிரியமுடன் சீராளன் 

4 கருத்துகள்:

  1. அன்புத்தோழா! இன்றுதான் இவ்வைலைப்பூ என் கண்ணில் கண்டேன். தாமத வருகைக்கு வருந்துகிறேன்...:(

    அருமையான தளம். வாழ்த்துக்கள் உறவே!
    தொடர்ந்திடு... தொடர்கிறேன் நானும்...
    ~~~~~~~~

    இங்கு அருமையான உணர்ச்சிக்கவி வாழ்த்துக்கள் சகோ!...

    ஊழித்தீயில் உலகம் உருகப்போகின்றதென்று
    ஓலமிட்ட கவிகண்டு உள்ளம் பதறியதே...


    பதிலளிநீக்கு
  2. இவ்வலைப்பூவில் எல்லாக் கவிதைகளும் பதிவிட்ட பின்பே தங்களுக்கெல்லாம் அறிவிக்க நினைத்தேன் ஆனால் தேடிவந்து வாழ்த்துகின்றாய் மகிழ்ச்சி ஒருபக்கம் எனிலும் தங்களுக்கு தெரிவிக்காமைக்கு வருந்துகின்றேன் என்னுயிர் சகோதரியே.....
    என்னிடம் எதற்கு மன்னிப்பு ,நான்தானே கேட்க்க வேண்டும்...

    தங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி சகோ
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு