நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 13 ஏப்ரல், 2013

இறைவா நீயுமா இப்படி....?



நிஜங்களோடு 
சலனப்படும் நிமிடங்கள்.......
            * * *
காற்றோடு கரையும்
கண்ணீர் துளிகள்
           ***

வலிகளுக்கே சொந்தமான 
வாழ்க்கை
           ***
போதுமடா  சாமீ 
உன் பிறப்பின் பயன்
           ***
விழியை  கேட்டு
அழகை  நீட்டினாய்.....
            ***
வழியை காட்டி 
முட்கள் கொட்டினாய்
            ***
ஒளியை கொடுத்து
இருளில் முட்டினாய்
            ***
காதலை  மறைத்து
கல்லறை காட்டினாய்
            ***
இத்தனைக்கும் என் செய்தேன்
உன்னால் நான் பிறப்பதற்கு
            ****
வேண்டாம்  
நீக்கிவிடு  மீள் பிறப்பை
இல்லையேல்   நிறுத்திவிடு 
என்  உயிர் படைப்பை...!

பிரியமுடன் சீராளன்

2 கருத்துகள்:

  1. கடவுள் ஒரு மோசக்காரன்

    தீமையை செய்துவிட்டு பரிகாரமாக நன்மையை செய்து
    நல்ல பெயர் வாங்கிக்கொள்கிறான்
    தீமையை நடக்க விடாமல் செய்திருக்கலாம் அல்லவா ?

    பதிலளிநீக்கு
  2. அப்படியும் செய்திருக்கலாம்....யாஸ்மின் ,ஆனால் எல்லாமே பிறப்பின் பயன்......

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு