குருதிப்பால் ஊட்டியவள்
கொட்டுகின்ற கண்ணீரில்
ஒடமிட்டு விளையாடி
உவகை கொள்ளும் உள்ளங்கள்
தேடி வந்து தாயணைக்க
மாறாயோ மானிடனே....?
வயல் வெளியில்
வெயில் உண்டு
வயிறார உணவுதர
வலி சுமக்கும் உழவனுக்கு
உற்றவிலை மறுக்காமல்
உரிய விலை கொடுத்துவிட
மாறாயோ மானிடனே...?
ஓட்டுக்கள் கேட்டு வாங்கி
உலகாளும் உயர்வர்க்கம்
வாக்களித்த வறியவனின்
வாழ்விழக்க வைக்கின்ற
வரலாறு இருள்விலக
மாறாயோ மானிடனே...?
மதமறியா மாக்களிலும்
மனமுண்டு,நட்புண்டு
மதமறிந்த மக்களிடம்
மனமின்றி நட்பின்றி
அறிவு நிலை அழிக்கின்ற
அகங்கார ஜீவனுள்ளம்
அமைதிக் கரம் நீட்டி
அன்புருகி அரவணைக்க
மாறாயோ மானிடனே...?
நிலையாமை எய்கின்ற
நிகழ்கால செல்வங்கள்
நிரப்புகின்ற பேராவல்
நீக்கியொரு சமுதாயம்
நித்தியம் கலை கல்வி
சத்தியம் தனைக்காத்து
சாகா வரம் கொள்ள
மாறாயோ மானிடனே..?
விழுமியங்கள் விம்மியழ
வேதனைகள் சொல்வடிய
அழகுருவம் தேடுகின்ற
அறியாமை இருள் விலக
அடுத்தொரு இறைதூதை
ஆண்டவன் அனுப்புங்கால்
அன்றேனும் மனிதனாக
மாறாயோ மானிடனே....?
பிரியமுடன் சீராளன்
சிந்திக்க வேண்டிய கேள்விகள்...
பதிலளிநீக்குஎங்கு சென்றாலும் வருக வருக எனச்சொல்லும் Cursor Point அருமை...
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் சார்.....தாங்களும் தேடிவந்து கருத்து சொல்கின்றீர்கள் மிக்க நன்றி
தங்கள்வரவும் கருத்துக்களும் கண்டு உளமகிழ்ந்தேன்
நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் கவிதை அருமை. இனி, தொடர்ந்து படிக்க முற்படுவேன். மனிதன் மாறிக்கொண்டு தான் வருகின்றான். ஆனால் ஜனத்தொகை அதிகமாக இருப்பதால், மாறியவர்களை விட மாறாதவர்கள் அதிகம்போல் தோன்றுகிறது. ‘அடுத்தொரு இறைதூதை ஆண்டவன் அனுப்பு’வான் என்ற உங்கள் நம்பிக்கை வீண்போகவேண்டாம். ஆனால் அதுவரை மனிதனைக் காத்திருக்கச் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாறாதவர்கள் உடனே மாறட்டுமே! கவிதைக்குக் கொடுக்கப்பட்ட படம் மனத்தை என்னவோ செய்கிறது. –நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.
பதிலளிநீக்குவாருங்கள் கவிஞர் செல்லப்பா அவர்களே
பதிலளிநீக்குதங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள்
அழகாய் கருத்திட்டு , தங்கள் பார்வையின் மேலான கருத்தையும் அழகாய் சொன்னீர்கள் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்
arumayana kavithai Anna... makkal vazhvu valamga ivai ellam nadakatum ... ( mobile il Tamil font illai Anna)
பதிலளிநீக்குதங்கள் வருகையே எனக்கு மகிழ்ச்சி தங்கையே....
பதிலளிநீக்குமிக்க நன்றி வாழ்கவளமுடன்
''..அடுத்தொரு இறைதூதை
பதிலளிநீக்குஆண்டவன் அனுப்புங்கால்
அன்றேனும் மனிதனாக
மாறாயோ மானிடனே....?..''
mika nalla vatikal. eniya vaalththu.
Vetha.Elangathilakam.
இனிய அன்னையர்தின நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
பதிலளிநீக்குமிக்க நன்றி கோவைக் கவி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
வணக்கம் அன்பு நண்பரே மனிதன் என்ற போர்வைக்குள் ஒழிந்திருப்பது யார் என்று யாருக்கு தெரியும் வறியவர்கள் ஏமாளிகளாய் கவி நாகா
பதிலளிநீக்குவணக்கம் கவி நாகா ..!
பதிலளிநீக்குஅழகாய் கருத்திட்டு , தங்கள் பார்வையின் மேலான கருத்தையும் அழகாய் சொன்னீர்கள் மிக்க நன்றி
வாழ்கவளமுடன்