நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 23 நவம்பர், 2015

ஈழம் பிறக்கும் இனிய நாள் !

             
             


கருவோடு  இனமழித்துச் சென்றான் - உலகின்
       கொல்லாமை கற்பித்த புத்தனையும் கொன்றான்
விருத்தியில்லை இனியென்றான் ஈழம்  - அவன்
       விழியறியா(து)  மாவீரம் விதைத்திட்ட ஆழம்
தெருவோடு சுமந்திடுவான் ஒருநாள் - பாவத்
       தேகத்தை அழித்தெமக்குத் தந்திடுவான் பெருநாள்
உருவாகும் ஈழத்தின் ஒளியில்  - அவன்
       உணர்வெல்லாம் சருகாகும் மரணத்தின் குழியில் !

சொல்லல்ல இக்கவியின்  ஊற்று - ஈழச்
       சோகத்தில் எரிகின்ற செந்தமிழின் கீற்று
எல்லோரும் வணங்குகின்ற வாரம் - இனியும்
       எமக்கில்லை கண்ணீரின் கனம்கொண்ட பாரம்
வில்லெடுத்து வேங்கையெனக் காட்டு  - பகை
       விடமழித்த புகழ்சொல்லி இடைவாளைத் தீட்டு
வல்வையதன்  புதல்வனுடன்  மீழ்வோம்  - எங்கள்
      வரலாற்றுத் தமிழோடு வம்சத்தை ஆள்வோம்  !

கார்த்திகை பூக்கின்ற மாதம்  - உயிரில்
       கண்விழிக்கும் மாவீரர் உரம்கொண்ட நாதம்
போர்க்களத்தில் பொழிந்திடுமே மேகம் -  மறவர் 
       பூதவுடல்  பூரிக்க உயிர்கொள்ளும் தேகம்
ஆர்ப்பரிக்கும் கடல்போல  எழுவீர் - இனம்
      ஆள்கின்ற வலிமையெலாம்  தந்திட்டு போவீர்
போர்ப்படையில் புகழ்சேர்த்தல் சிறப்பு - அந்தப் 
      பொறிமுறையே விரைவாக்கும் ஈழத்தின் பிறப்பு !

                                வீர வணக்கம்


11 கருத்துகள்:

 1. எழுச்சி மிக்க வரிகள் எம் தேசத்தின் உணர்ச்சி மிகு நாட்கள்.

  அவன் உணர்வெல்லாம் சருகாகும் மரணத்தின் குழியில் !
  நடந்திட்டால் மகிழ்ச்சியே!

  மாவீரராய் உயிர் நீர்த்தோர்க்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நிஷா !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் !

   நீக்கு
 2. வணக்கம்
  ........வல்வையதன் புதல்வனுடன் மீழ்வோம் - எங்கள்
  வரலாற்றுத் தமிழோடு வம்சத்தை ஆள்வோம் !........
  உணர்ச்சி மிகு வரிகள்,

  காலம் மாறும் அங்கு காட்சிகளும் மாறும் நம்புவோம்,,,,

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பேராசிரியரே !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் !

   நீக்கு
 3. வார்த்தைகளில் உணர்ச்சி மிகுந்த வரிகள் கவிஞரே அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜி !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் !

   நீக்கு
 4. உள்ளத்திலிருந்து பொங்கிய உனர்வுகள்.நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பித்தன் ஐயா !

   தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன் !

   நீக்கு
 5. வணக்கம் கவிஞரே! வாழ்த்துக்கள்.நன்று.

  ஈழம் மலரும்!
  இன்பம் பூக்கும்!
  மாவீரர் கனவொருநாள்...
  மண்ணில் நனவாகும்!

  அடிமை விலங்கொடியும்!
  அன்னைத்தமிழ் ஆளும்!
  ஈழ நிலமெல்லாம்...
  இன்பம் பெருக்கெடுக்கும்!

  நாளைவரும் விடியலது,
  நம்மினத்தைக் காக்கும்!
  நாதியற்ற தமிழரென்னும்,
  பேரழியும்! பெருமைபெறும்!

  தமிழன்னை சிரித்தபடி,
  ஈழமெங்கும் வலம்வருவாள்!
  மாவீரர் புகழ்பாடும்...
  பெருமண்ணில் நின்றுநாம்,
  விடுதலைக்கு வாழ்த்துரைப்போம்!

  அது வரைக்கும்...
  அஞ்சாது போர்புரிவோம்!
  வெல்வோம்! அரசாள்வோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஜூட் அருளப்பன் !

   தங்கள் இனிய வருகைக்கும் நம்பிக்கை ஊட்டும் கவிதைக்கும் மிக்க நன்றி ஈழம் என்னும் தேசத்தில் என்றோ ஒருநாள் சந்திப்போம் நன்றி வாழ்க வளமுடன் !

   நீக்கு
 6. வணக்கம் கவிஞரே! வாழ்த்துக்கள்.நன்று.

  ஈழம் மலரும்!
  இன்பம் பூக்கும்!
  மாவீரர் கனவொருநாள்...
  மண்ணில் நனவாகும்!

  அடிமை விலங்கொடியும்!
  அன்னைத்தமிழ் ஆளும்!
  ஈழ நிலமெல்லாம்...
  இன்பம் பெருக்கெடுக்கும்!

  நாளைவரும் விடியலது,
  நம்மினத்தைக் காக்கும்!
  நாதியற்ற தமிழரென்னும்,
  பேரழியும்! பெருமைபெறும்!

  தமிழன்னை சிரித்தபடி,
  ஈழமெங்கும் வலம்வருவாள்!
  மாவீரர் புகழ்பாடும்...
  பெருமண்ணில் நின்றுநாம்,
  விடுதலைக்கு வாழ்த்துரைப்போம்!

  அது வரைக்கும்...
  அஞ்சாது போர்புரிவோம்!
  வெல்வோம்! அரசாள்வோம்!

  பதிலளிநீக்கு