பிரிவைத்தேடும் பிரியமானவர்களே நீங்கள் என்ன பேசாத ஓவியங்களா உங்கள் உதிரத்தில் ஸ்பரிசங்கள் தீண்டாத உயிர் அணுக்களா கலந்திருக்கின்றன எதுவானாலும் சொல்லுங்கள் உங்களைவிட்டு உயரப்பறக்கிறேன் அதற்காக வானம்பாடி அல்ல நான் உள்ளூரில் ஓலமிடும் ஊர்க்குருவிதான் சிறகுகள் சிறிதெனினும் உறவுகள் ஓராயிரம் கொண்டவன்..!
மாண்புமிகு மனித குலத்துக்குள்
மறைபொருளாய் மௌனிக்கப்பட்ட
மனிதாபிமானத் தேடல்களில்
எனக்கான இடைவெளிகளை
நிரப்பியவாறு என் பயணம்
சூழலின் சூழ்நிலைகளை கடந்து செல்கிறது...!