இந்திய அரசியலும்...
இறையாண்மை அதிகாரமும்
ஈழத்தில் எழுதிய காவியம்
இன்னமும்
குருதி வாசனையோடு
குதூகலிக்கின்றன
பேரினவாதிகளின்...பிரச்சார மேடையில்...!
அழிவது தமிழன் என்பதால்...
அமைதி காத்தீர்...
ஆயிரமாயிரம் அக்கினி குஞ்சுகள்...
அமரத்துவம் அடைந்தன ...
அழுகையொலி இன்னும்
மாறவில்லை மண்ணுக்குள்ளும் ...!
பாரத தேசமே...உன்
பல்லக்கை கேட்கவில்லை...
பரிகாசம் பண்ணும் இனவெறிக்கு..
பாடம் சொன்னோம்
பாடை கட்ட ஏன்
பன்னாங்கு தந்தாய்...!
உயிரின் ஓலம்
உன்காதில் விழுந்தும்...
உள்ளம் நிறைந்த
புன்னகை உதிர்த்தாய் ..
உன்னவனும் அங்கே
உயிர் விடும் போதும்..!
நீயறிவாய்
நீ தீட்டிக்கொடுத்த வாழ்
எம்மீது சித்திரம் கீறியதை
நாங்கள் அன்று
நரபலி கொடுக்கப்பட்டாலும்
உரமாகி உயிர்த்தெழுவோம் ...!
விழிகளில் துணிவிருந்தால்...
வந்துபார்.அன்று
தமிழன் ஆளும் தனியரசாட்சியின்
காலத்தீயில் காணாமல் போயிருக்கும்
.நீ கட்டிக்காத்த போ(லி)திமரங்கள்...!.
பிரியமுடன் சீராளன்
இந்திய அரசியலும்...
பதிலளிநீக்குஇறையாண்மை அதிகாரமும்
ஈழத்தில் எழுதிய காவியம்
இன்னமும்
குருதி வாசனையோடு
குதூகலிக்கின்றன அருமையான வரிகள்
அழுகையொலி இன்னும்
பதிலளிநீக்குமாறவில்லை மண்ணுக்குள்ளும் ...!
மிக்க வருத்தமாய் உள்ளது .
பதிலளிநீக்குமிக்க நன்றி indrayavanam.blogspot.com தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
ஆம் இன்னும் மாறவில்லைத்தான் தொடர்கதையாக்கப்பட்டது எம்மினத்தின் அழுகைகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி கவியாழி கண்ணதாசன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி
நசுக்கியது உடல்களை அங்கு. விழித்தது எம் உணர்வுகள் இங்கு.
பதிலளிநீக்குநல்ல உணர்வுக்கவி. சிறப்பு. வாழ்த்துக்கள்!
உரக்கசொன்னாய் எந்தோழா ஊமையல்ல நாங்களென
சிறக்கும் எம்மினம்! பிறக்கும் தமிழீழம்!!!...
மிக்க நன்றி என் உறவே தங்கள் வருகை மிகவும் மகிழ்வாய் உள்ளது
பதிலளிநீக்குதேடிவந்து வாழ்த்துகிறாய்
தெரியாத இடமெல்லாம்
நாடிவந்து நன்றி சொல்ல
நான் என்ன தவம் செய்தேன்
இங்கே தங்கள் முதல் வருகையும் வாழ்த்தும் என் உணர்வுகளை இன்னும் இன்னும் கூர்மையாக்கும் வாழ்த்துக்கள் சகோ வாழ்கவளமுடன்
வருத்தப்பட வைத்த வரிகள்...
பதிலளிநீக்குஇளமதி அவர்களுக்கும் நன்றி... (அவர் தளத்தின் மூலம் தான் இந்த தளம் தெரியும்)
தொடர வாழ்த்துக்கள்...
உடல்கள் அழிக்கப்படலாம். உணர்வுகளை? கவிதையின் வெப்பம் சுட்டது என்னையும்! ப்ரியாவின் தளம் மூலம் அறிந்தேன் உங்கள் பெயரை. இளமதி சிஸ்டரின் வழிகாட்டலால் அறிந்தேன் உங்கள் இடத்தை! படைப்பைப் படித்ததும் உணர்ந்தேன் உங்கள் மனதை! மிக்க மகிழ்வு தோழா!
பதிலளிநீக்குவாருங்கள் திண்டுக்கல் தனபாலன் வணக்கம்
பதிலளிநீக்குதங்கள் முதல்வருகைக்கும் ,வருகைக்கு காரணமான அன்பு சகோதரி இளமதிக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வாருங்கள் பால கணேஷ் வணக்கம்
பதிலளிநீக்குதங்கள் முதல்வருகைக்கும் ,வருகைக்கு காரணமான அன்பு சகோதரி இளமதிக்கும்,அன்புத்தங்கை பிரியாவுக்கும் நன்றிகள்
உணர்வுகளை அழிக்கமுடியாதுதான்
இறக்கும் வரைக்கும் நிழல்போல் தொடரும் உண்மை
அன்பாய் வந்து,அழகாய் கருத்திட்டீர்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
உலகத் துன்பத்தையெல்லாம் ஓரிடத்தில் கொட்டியதைப்போல் துயரப்பட்ட ஈழமக்கள் கண்ணீரும் செந்நீரும் கொக்கரிக்கும் கொடும்பாவிகளின் குடி கெடுக்கும் அன்று சீதையின் கண்ணீர் இன்றோ பல பேதைகளின் கண்ணீர்! விடிந்த பொழுதொன்று இரவுக்குள் மூழ்கியதுபோல்...... இருளை விரட்ட ஏற்றிடுவோம் ஈழம் என்ற ஒளி விளக்கை......
பதிலளிநீக்குவணக்கம் கவி நாகா ..!
பதிலளிநீக்குதங்கள் ஆற்றாமை கண்டு நானும் ஏங்குகிறேன்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்