நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 13 ஏப்ரல், 2013

வைரமுத்து பாடி இருந்தால்..!



உன்வாழ்வு வலியென்று
ஒப்பாரி வைக்காதே
எம்பாடு போனகதை
எறும்புக்கும் காச்சல் வரும்....!


வாழ்க்கைப் பசியெடுக்க 
வயல்காடு உழுத கதை 
 வெறும்சோறு  உண்ணையிலே 
விழிபிதுங்கி நின்ற கதை
வாய்க்கரிசி போடும்வரை
மறையாது மனசவிட்டு...!

குப்பி விளக்கொளியில் 
குந்திருந்து படித்தகதை
வேலைக்கு போகையிலும்
வெளிராடை அற்ற கதை
வெந்துடல் போகையிலும்
வேகாது நெஞ்சைவிட்டு....!

காதலிக்கும் கனவுகளில்
கண்ணீரை சொரிந்த கதை
அச்சடிச்ச பணத்தாளை
ஆண்டவனாய் பார்த்தகதை
ஆகாயம் இடிந்தாலும்
மடியாது எனைவிட்டு..!

பெற்றதாய் மறைதலிலே
பேதலித்து நின்றகதை
உற்றவர்கள் மற்றவராய்
அற்றுவிட்டுப் போனகதை.
உள்ளம் அழிந்தாலும்
உயிரை விட்டு போகாது...!..!

எல்லோர்க்கும் கதையுண்டு
என்று சொல்லும் சமூகத்தில்
ஏழைக் கதைகளுக்கு
எங்குமில்லை சாமரங்கள்.... !

ஒளிகொள்ளும் பௌர்ணமிக்கு
இருள் கொள்ளத் தெரியாது 
ஒட்டுத் துணிகேட்டு
உள்ளங்கை நீட்டாதே
உயர்வுக்கு வழியென்ன 
உனக்குள்ளே தேடிடுவாய்...!

பிரியமுடன்  சீராளன்...



3 கருத்துகள்:

  1. கடைசி வரி மிகவும் அருமை அண்ணா... எதோ ஒரு நம்பிக்கையின் வெளிப்பாடுதான் நாளைக்கான வேலைகளின் ஒத்தி வைப்பண்ணா...

    பதிலளிநீக்கு
  2. அருமை அண்ணா .... எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
    உன்வாழ்வு வலியென்று
    ஒப்பாரி வைக்காதே
    எம்பாடு போனகதை
    எறும்புக்கும் காச்சல் வரும்....!

    ஒளிகொள்ளும் பௌர்ணமிக்கு
    இருள் கொள்ளத் தெரியாது
    ஒட்டுத் துணிகேட்டு
    உள்ளங்கை நீட்டாதே
    உயர்வுக்கு வழியென்ன
    உனக்குள்ளே தேடிடுவாய்...!

    பதிலளிநீக்கு
  3. ...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி யாஸ்மின்

    பதிலளிநீக்கு