நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 14 மே, 2013

இறைவா இறந்துபார் நீயும் ..!இறைவா..!
இறந்துபார் நீயும் 
ஈரமில்லா நெஞ்சங்கள் 
இதயத்தில் அறைவதை
காண்பாய் இங்கே..!


வாழ்வுக்கு வழி தந்தாயா 

இல்லை வலி தந்தாயா...
உன்னை நீயே உற்றுக்கேள் 
ஆறறிவு தந்தவனே...
ஆறாத வடுக்களை -ஏன்
புதைத்தாய் எம்மோடு...?

வாழ்ந்து பார் 

மனிதனாய்  ஒருநாள்...
மண்ணோடு நாங்கள் 
மறைகின்ற வரையில்...
நீ தந்த காயங்கள்..
நெருப்பாய் எரிவதனை
நீயும் காண்பாய்..! 

ஏழ்மையில் கூட 

இறைவா என்றோம்..
எரிகின்றவரையில் 
மறவா நின்றோம்
உணர்ந்தாயா.. இல்லை
உறங்கினாயா எப்போதும்..!

மொழியின் பெயரால் 

மதத்தின் பெயரால்
இனத்தின் பெயரால் 
இவ்வுலகின் அழிவுகள் 
இன்னமும் தொடர 
இதயமில்லா உன்படைப்பே
எல்லாவற்றின் மூலம்..!

ஆதலால் 

விடிந்தும் விடியாத 
பொழுதுகளில் 
வேதனை வளர்க்கும் 
சாதனை வேள்வியில்
சத்தியம் அழித்து 
சகாவரம் தரவேண்டாம்
முடிந்தால் 
பிறப்பை நிறுத்து 
இல்லையேல் 
பிறந்துவந்து திருத்து..!

பிரியமுடன் சீராளன்

13 கருத்துகள்:

 1. விடையில்லா கேள்விகள்... எல்லாம் நம் மனதில்...

  பதிலளிநீக்கு
 2. மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்சார்
  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ...

  வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 3. //ஆதலால்
  விடிந்தும் விடியாத
  பொழுதுகளில்
  வேதனை வளர்க்கும்
  சாதனை வேள்வியில்
  சத்தியம் அழித்து
  சகாவரம் தரவேண்டாம்
  முடிந்தால்
  பிறப்பை நிறுத்து
  இல்லையேல்
  பிறந்துவந்து திருத்து..!//

  பதிலளிநீக்கு
 4. வாருங்கள் பிரியா

  கடவுளுக்கே சவாலா என்று மனசுக்குள் கேட்ப்பது விளங்குகிறது...ஆனால் என்ன பண்ணலாம்
  எல்லாம் அவரிடம்தானே கெடக்கணும்.

  நன்றி ப்ரியா

  பதிலளிநீக்கு
 5. ''...ஆதலால்
  விடிந்தும் விடியாத
  பொழுதுகளில்
  வேதனை வளர்க்கும்
  சாதனை வேள்வியில்
  சத்தியம் அழித்து
  சகாவரம் தரவேண்டாம்
  முடிந்தால்
  பிறப்பை நிறுத்து
  இல்லையேல்
  பிறந்துவந்து திருத்து..!..''
  நல்ல வேண்டுதல் நிறைவேறட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோவைக்கவி
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

   வாழ்கவளமுடன்

   நீக்கு
 6. பிறந்து வந்தால் நன்றாகத்தான் இருக்கும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சசிகலா
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

   வாழ்கவளமுடன்

   நீக்கு
 7. "வாழ்வுக்கு வழி தந்தாயா
  இல்லை வலி தந்தாயா...
  உன்னை நீயே உற்றுக்கேள்
  ஆறறிவு தந்தவனே...
  ஆறாத வடுக்களை -ஏன்
  புதைத்தாய் எம்மோடு...?"

  நல்ல கேள்வி. ஆனால் இதற்கான விடையளிப்பதும் யாரோ?

  பதிலளிநீக்கு
 8. பிறப்பை நிறுத்து இல்லையேல் பிறந்து வந்து திருத்து அருமை இது நல்ல தீர்ப்பு.....

  பதிலளிநீக்கு

 9. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

  மிக்க நன்றி கவி நாகா

  வாழ்கவளமுடன்

  பதிலளிநீக்கு
 10. வாழ்வுக்கு வழி தந்தாயா
  அல்லது வலி தந்தாயா
  விழி அல்லவா தந்திருக்கிறேன்
  பார்த்து நட என்பரோ.....
  சோதனை வேதனை எல்லாம்
  புடம் போடத் தானே, சோகம் இன்றி வாழ வாழ்த்துகிறேன்

  ஆறறிவு கொண்டவர் தான் அல்லல்
  படுவதும் அதனால் தான்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் இனியா ..!

  இங்கும் உங்கள் தரிசனம் கண்டு மகிழ்ந்தேன்

  மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு