சிட்டுக் குருவிகளின் சிறுகீச்சு சத்தத்தில்
மெட்டுக் கட்டி தினம் மேகத்தை பாடியவன்
மொட்டுதிரும் ஈழப்பூ முகம் மலர
பட்டுப்போய் நின்றான் பாரிற்கு உரமாகி ..!
தாய்மார்பு தவிக்கையிலே தாய்நாடு சுமப்பதற்கே
வண்டளையும் சோலையிலே வாகைப்பூ ரசித்தவனே
அண்டத்தின் விடியலுக்கு அவனியிலே சேவல்கூவ
பிண்டத்தை கரைத்து நிற்கும் பெரியப்பா மகன் நீயோ...!
இங்கிவர்க்கு இறைமையில்லை என்றெதிரி அறைகூவ
பொங்கி எழுந்து புயலாக வெடித்தன்று
போர்க்களத்தில் வென்றவுன் புண்ணிய பாதங்கள்
தங்கிய இடமெல்லாம் தங்கமுலாம் பூசுகிறேன் ..!
போர்முரசு கொட்டி போர்க்களங்கள் வென்ற
வானரச்சேனை பற்றி வரலாற்றில் கண்டோம்
மார்பறுத்து போனவனை மரம்போல் எரித்தழித்த
மாவீரம் கொண்ட சேனை மண்ணிலே கண்டேனடா ...!
விதைகுழியில் உன்னை விதைத்தநொடி இன்றும்
விழிகளுக்குள் வந்து விம்முதடா மாவீரா
சதைஅழிந்த நிலத்தின் சந்தன வாசத்தில்
கதைசொல்லும் என்றும் காலத்தை வென்று...!
தேசியத்தின் ஆன்மாவை யாசித்து நின்றவனே
பாசிசத்தின் கரம்கொண்ட தாசிமகன் தலைசீவ
வேசங்கள் பலகொண்டு வென்று வந்தாய்
நேசம் கொள்கின்றேன் நிம்மதியாய் உறங்கிடுவாய்...!
வன்னி மரங்களிலும் மணல்திட்டு மடுக்களிலும்
பொன்னியின் செல்வா நீ போரிட்ட வரலாறு
உன்னினிய தோழர்களின் உடல்சுமந்த நினைவோடு
உயிருக்குள் வியர்க்குதடா உனதான்மா மீள்பிறக்க...!
http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
இந்த மாத காற்றுவெளி இதழில் (பக்கம் 47) வெளி வந்த என் மாவீர நண்பனுக்கான கவிதை
......நட்புடன் இவன்....
சீராளன்
மெட்டுக் கட்டி தினம் மேகத்தை பாடியவன்
மொட்டுதிரும் ஈழப்பூ முகம் மலர
பட்டுப்போய் நின்றான் பாரிற்கு உரமாகி ..!
தாய்மார்பு தவிக்கையிலே தாய்நாடு சுமப்பதற்கே
வண்டளையும் சோலையிலே வாகைப்பூ ரசித்தவனே
அண்டத்தின் விடியலுக்கு அவனியிலே சேவல்கூவ
பிண்டத்தை கரைத்து நிற்கும் பெரியப்பா மகன் நீயோ...!
இங்கிவர்க்கு இறைமையில்லை என்றெதிரி அறைகூவ
பொங்கி எழுந்து புயலாக வெடித்தன்று
போர்க்களத்தில் வென்றவுன் புண்ணிய பாதங்கள்
தங்கிய இடமெல்லாம் தங்கமுலாம் பூசுகிறேன் ..!
போர்முரசு கொட்டி போர்க்களங்கள் வென்ற
வானரச்சேனை பற்றி வரலாற்றில் கண்டோம்
மார்பறுத்து போனவனை மரம்போல் எரித்தழித்த
மாவீரம் கொண்ட சேனை மண்ணிலே கண்டேனடா ...!
விதைகுழியில் உன்னை விதைத்தநொடி இன்றும்
விழிகளுக்குள் வந்து விம்முதடா மாவீரா
சதைஅழிந்த நிலத்தின் சந்தன வாசத்தில்
கதைசொல்லும் என்றும் காலத்தை வென்று...!
தேசியத்தின் ஆன்மாவை யாசித்து நின்றவனே
பாசிசத்தின் கரம்கொண்ட தாசிமகன் தலைசீவ
வேசங்கள் பலகொண்டு வென்று வந்தாய்
நேசம் கொள்கின்றேன் நிம்மதியாய் உறங்கிடுவாய்...!
வன்னி மரங்களிலும் மணல்திட்டு மடுக்களிலும்
பொன்னியின் செல்வா நீ போரிட்ட வரலாறு
உன்னினிய தோழர்களின் உடல்சுமந்த நினைவோடு
உயிருக்குள் வியர்க்குதடா உனதான்மா மீள்பிறக்க...!
http://kaatruveli-ithazh.blogspot.co.uk/
இந்த மாத காற்றுவெளி இதழில் (பக்கம் 47) வெளி வந்த என் மாவீர நண்பனுக்கான கவிதை
......நட்புடன் இவன்....
சீராளன்
வீழ்ந்த விதைகள் முளைத்து வரும் போர் வாளாய் அநீதியின் வேரறுக்க
பதிலளிநீக்குமாவீரரே உங்கள் இலட்சியம் வெல்லும். உங்கள் காலடித் தடத்தின் வழியே எம் ஈழம் வெல்வோம்.
பதிலளிநீக்குவணக்கம் ராசன் நாகா ..!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் நம்பிக்கை வரிகளுக்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
//விதைகுழியில் உன்னை விதைத்தநொடி இன்றும்
பதிலளிநீக்குவிழிகளுக்குள் வந்து விம்முதடா மாவீரா
சதைஅழிந்த நிலத்தின் சந்தன வாசத்தில்
கதைசொல்லும் என்றும் காலத்தை வென்று...!//
மாவீரர் லட்சியம் வெல்லட்டும்...
மிக்க நன்றி சே.குமார்
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்தும்
நன்றிகள்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
காதலின் மகிமையை சௌமியத்தில் கண்டேன். மண்ணின் மைந்தனாக புதைந்து கிடந்த அக்கறை, அன்பு, ஆதங்கத்தைக் அக்கினிச் சுவடுகளில் அள்ளித் தெளித்ததையும் கண்டு வேதனை கொண்டேன். அத்தனையும் அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகொல்லவரும் தீவினைகள் முன்னே.
கொண்டு வரும் வெற்றிதனை பின்னே.
ஈழப்பூ மலரும் உன் முன்னே.
அதை காணவரும் உம் கண்ணே.
வாருங்கள் இனியா...!
பதிலளிநீக்குஅல்லல்கொண்ட ஆன்மாவில்
அழுகுரல்கள் நிதர்சனமாய்
அன்னைமண் விடிவுக்காய்
அனுதினமும் அழுகின்றேன்..!
அதனால்தான் இப்படியும் ஒருபக்கத்தை அமைத்தேன் அங்கெ காதல் இங்கே காயம் இரண்டிலும் என் இரத்தம் வடியும் வார்த்தைகளில்....!
மிக்க நன்றி இனியா
தங்கள் வருகைக்கும் கருத்தும்
நன்றிகள்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் தனபாலன் !
பதிலளிநீக்குபார்த்தேன் தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன்
கருப்பினம் அடிமை பட்ட மண்ணில்
பதிலளிநீக்குஒபாமா ஆல்வதைபோல் (!)
நாமும் ஒரு நாள் வெல்வோம்
வெறும் குறியீடாக மட்டுமின்றி
கொள்கை பிடிப்போடும் !
உணர்வை தொட்ட கவிதை
வாழ்த்துக்கள் சகோ !
தங்கள் வருகைக்கும் நம்பிக்கை வரிகளுக்கும் மிக்க நன்றி மைதிலி
பதிலளிநீக்குவாழ்வோம் என்னும் நம்பிக்கையில்தான்
இன்னும் இன்னும் எம்மினத்தில் உயிர்ப்புக்கள் தொடர்கின்றன
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
இயக்கம் குறித்தும் போராட்டம் குறித்தும் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தேன் ...
பதிலளிநீக்குஎனது கேரள நண்பர் ஒரு ஈமெயில் அனுப்பினார்.
மிக கொடூரமான முறையில் புலிகளை சித்திரவதை செய்து எரித்த படங்கள் அவை...
அதற்கப்புறம் பேச ஒன்றுமில்லை என்று தோன்ற வைய்த்த படங்கள் அவை...
உங்கள் பதிவில் இருக்கும் படம் இருக்கும் இடம் இன்று எப்படி இருக்கும் என்று யோசித்தாலே வலிக்கிறது...
நல்ல அஞ்சலி கவிதை சகோ.. வலிகளுடன் ஒரு நன்றி
வணக்கம் மது
பதிலளிநீக்குதங்கள் உணர்வுகளை மதிக்கின்றேன் தாங்கள் அதற்கு முன் எந்த படங்களையும் காணவில்லையா ..?
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
வாழ்க வளமுடன்
மிக்க நன்றி !
பதிலளிநீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கவிஞர் அண்ணா வாழ்க வளமுடன்
வலியும் வேதனையும் அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். மனதைக் கனக்கச் செய்த கவிதை.
பதிலளிநீக்குவணக்கம் கலையரசி !
நீக்குவலிகளை மறப்போம் வருங்காலம் காப்போம் மிக்க நன்றி