நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வியாழன், 4 செப்டம்பர், 2014

சின்னப்பொண்ணு உன்னிடம் !


சின்ன பொண்ணு உன்னிடம்
சிந்தும் வார்த்தை ஔடதம்
வண்ண வண்ண சிரிப்பினால்
வாழ்வு கூட சௌக்கியம் !

உரிக்க உரிக்க வெங்காயம்
உன்னை அழ செய்திடும்
சிரித்து சிரித்து பேசினால்
சிந்தை தெளிவு  ஆகிடும் !

புதன், 22 ஜனவரி, 2014

ளகர ழகர வேறுபாடுகள்


நண்பர்களே, ளகர ழகர வேறுபாடுகள் என்ன என்பதையறிந்து இயன்ற வரையில் பிழையின்றி எழுத முயற்சி செய்வோம்.

அளம் = உப்பு
அழம் = பிணம்

அளகு = பெண்பறவை, கோழி
அழகு = அலங்காரம்

அளி = தா, அருள், கா, குழை, அருள், வண்டு, சேறு
அழி = கெடு

அளை = கல, துழாவு, குழை, வளை, தயிர், வயிற்றிளைச்சல்-சீதபேதி
அழை = கூப்பிடு, பெயரிட்டு வழங்கு

ஆளம் = ஒரு விகுதி
ஆழம் = ஆழம் (depth)

ஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி, ஒரு விகுதி
ஆழி = கடல், மோதிரம், சக்கரம்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

வடசொற்களும் - தமிழ் சொற்களும்

அழகிய தமிழ் 
=========

வடசொல்  - தமிழ்சொல் 
    =================

அபூர்வம் -  அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி

வெள்ளி, 3 ஜனவரி, 2014

அழகிய தமிழ் - றகர ரகரச் சொற்கள்அரம் - ஓர் ஆயுதம்
அறம் - தருமம்

அரவு - பாம்பு
அறவு - நீக்கம், முடிவு

அரன் - சிவன்
அறன் - தருமம்

அரா - பாம்பு, சிவனே
அறா - நீங்கா, நீங்காத (அம்புறாத்துணி)

அரி - காய்களை சிறிதாயறு, பொருள்களைச் சிறிது சிறிதாக சேர், பயிர்களை                அறு, எறும்பு போல் பொருள்களைத் தின், அரிக்கட்டு, திருமால்
அறி - தெரிந்து கொள்

அரு - வடிவில்லாதது, அரிய, அருமையான
அறு - நீங்கு, ஆறு