அரம் - ஓர் ஆயுதம்
அறம் - தருமம்
அரவு - பாம்பு
அறவு - நீக்கம், முடிவு
அரன் - சிவன்
அறன் - தருமம்
அரா - பாம்பு, சிவனே
அறா - நீங்கா, நீங்காத (அம்புறாத்துணி)
அரி - காய்களை சிறிதாயறு, பொருள்களைச் சிறிது சிறிதாக சேர், பயிர்களை அறு, எறும்பு போல் பொருள்களைத் தின், அரிக்கட்டு, திருமால்
அறி - தெரிந்து கொள்
அரு - வடிவில்லாதது, அரிய, அருமையான
அறு - நீங்கு, ஆறு
அருகு - பக்கம், குறைவாகு
அறுகு - ஒரு புல்
அரை - பாதி, இடை, மாவாக்கு, துவையலாக்கு
அறை - அடி, அரங்கு
ஆரை - ஒரு கீரை, சக்கரவுறுப்பு
ஆறை- ஆற்றூர் எனபதன் மரூஉ
இர - வேண்டு, பிச்சையெடு
இற - சா, அளவுகட
இரக்கை - பிச்சையெடுத்தல்
இறக்கை - சாதல், சிறகு
இரங்கு - அருள்கூர்
இறங்கு - கீழ்வா
இரப்பு - பிச்சையெடுத்தல்
இறப்பு - சாவு, இறவாணம்
இரவு - இரவு
இறவு - முடிவு
இரா - இரவு, இருக்கமாட்டா
இறா - இறால்
இராட்டு - கைராட்டினம்
இறாட்டு - இறால்
இரு - தங்கு, உட்கார், காத்திரு, வாழ்ந்திரு, இரண்டு
இறு - முடி, அறு, செலுத்து
இருக்கு - முதல் ஆரிய வேதம்
இறுக்கு - இறுகச்செய்
இரும்பு - ஓர் உலோகம்
இறும்பு - குறுங்காடு
இரை = விலங்குணவு
இறை = சிதறு, இழு, தெறி, சிறிது, வளைவு, முன்கை வரி, அரசன், கடவுள்
உரவு = வலிமை
உறவு = கலந்து வாழ்தல்
உரி = கழற்று, தோலுரி, தோல், அரைப்படி, ஒரு சொல்வகை உரிமை
உறி = பாத்திரம் வைக்கத் தூக்குங் கருவி
உரிஞ்சு = உரசு, தீண்டு
உறிஞ்சு = (வாயால்) உள்ளிழு
உரு = வடிவம். நிறம், பாட்டு, அச்சம், பொருள், மந்திரம்
உறு = பொருந்து, மிகுந்த
உருமு = இடி
உறுமு = நாய்போல் முறுமுறு
உருமி = புழுங்கு
உறுமி = ஒரு வகைப்பறை
உரை = சொல், உரசு, சொல், அருத்தம், புகழ்
உறை = இறுகு, தங்கு, மூடி
எரி = வேகு, காந்து, சின, நெருப்பு
எறி = எறிதல்
ஏரல் = பிராணிகள் ஊர்வதால் நிலத்தில் விழும் கோடு
ஏறல் = ஏறுதல்
ஒரு = ஒரு
ஒறு = தண்டி(தண்டனை கொடுத்தல்)
கர = மறை
கற = பீச்சு
கரகரப்பு = தொண்டையரிப்பு
கறகறப்பு = தொண்டையில் நீரொலித்தல்
கரம் = கை, மயம்
கறம் = வர்மம்
கரி = அடுப்புக்கரி, யானை, கருப்பாகு, தீ
கறி = தொடுகறி, இறைச்சி, புல்லைக்கடி
கரு = கருப்பாகு, முட்டை, கருப்பம், மூலம், கரிய
கறு = கோபி, கருப்பாகு
கருப்பு = கரிய நிறம்
கறுப்பு = கரிய நிறம், கோபம்
கரை = (திரவத்தில் அல்லது நீரில்) கரை, கத்து, அழை,அழு, அணை, எல்லை, பங்கு
கறை = களங்கம், இரத்தம்
கிரி = மலை
கிறி = இடும்பு, கிறுக்கு
குரம் = குளம்பு
குறம் = குறி சொல்லல், ஒரு வகைப்பிரபந்தம், ஒரு கலம்பக வுறுப்பு
குரவன் = பெரியோன்
குறவன் = ஒரு குலத்தான்
குரங்கு = ஒரு விலங்கு
குறங்கு = தொடை
குரவை = ஒரு கூத்து
குறவை = ஒரு மீன்
குரு = நிறம், ஆசிரியன், சிறு கொப்புளம்
குறு = கொய், குட்டையான (குறுகுறு = இரட்டைக்கிளவி)
குருகு = நாரை, கொக்கு, அன்னம்
குறுகு = கிட்டு, சுருங்கு
குருக்கு = ஒரு செடி
குறுக்கு = சுருக்கு, ஊடே, நடுமுதுகு
குருமா = ஒரு வகைக் குழம்பு
குறுமா = சிறு விலங்கு
குருமான் = குருவின் மகன், ஒரு குலம், விலங்கின் குட்டி
குறுமான் = சிறுமான், சிறுமகன்
குரும்பை = (தென்னை, பனை முதலியவற்றின்) பிஞ்சு
குறும்பை = ஓர் ஆடு
குரை = குலை, குலைத்தல், ஓர் அசைநிலை
குறை = சுருக்கு, நிரம்பாமை, குற்றம்
கூரை = முகடு
கூறை = பிண ஆடை, தேவை
சிரை = மயிர் வறண்டு
சிறை = தடு, காவற்கூடம்
சுரா = மதுபானம்
சுறா = ஒரு வகை மீன்
சூரை = ஒரு செடி
சூறை = கொள்ளை, சுழற்காற்று (சூறாவளி)
செரி = சீரணி
செறி = திணி, அடக்கு, நெருங்கு, ஓர் அணி
செரு = போர்
செறு = கோபி, அழி, நெருங்கு, நிறை, திணி, அடக்கு, வயல்
சொரி = பொழி
சொறி = பறண்டு, தினவு, தேய், ஒரு நோய், சுரசுரப்பு
தரி = அணி,தங்கு,பொறு
தறி = வெட்டு, கம்பம், முளை
தரிப்பு = கடுக்கன்
தறிப்பு = வெட்டுதல்
தரு = மரம், தருகிற
தறு = கட்டு, முடி
திரம் = உறுதி, ஒரு தொழிற்பெயர் விகுதி
திறம் = வலிமை, பக்கம், கூறுபாடு, வகை
திரை = மேலிழு, திறன் அலை போல் மேடுபள்ளமாகு, தோற்சுருக்கு, அலை
திறை = கப்பம்
துர = செலுத்து
துற = பற்றுவிடு, நீக்கு
துரு = அழுக்கு
துறு = நெருங்கு
துரை = பிரபு, வெள்ளைக்காரன்
துறை = நீர்நிலையில் இறங்குமிடம், துவைக்கும் இடம், கப்பல் நிலையம், பிரிவு
தெரி = தோன்று, அறி, (தெரிவு செய்தல்)
தெறி = இறைத்து விழு, தகர்ந்து விழு, விரலாற் சுண்டு
தெரு = வீதி
தெறு = அழி
தேரல் = ஆராய்தல்
தேறல் = தெளிதல், தேன், பரீட்சையில் தேறுதல்
நரை = மயிர் வெளு, வெண்மயிர், வெள்ளை
நறை = தேன்
நிரை = வரிசையாய் வை, வரிசை, மந்தை, ஒரு செய்யுள் அசை வகை
நிறை = நிரம்பு, நிரப்பு, கனம், நிறுத்தல், நிறைவு, மனவடக்கம்
நெரி = உடை, நொறுங்கு, நெருக்கு, நசுக்கு, விரல் சுடக்கு
நெறி = வழி, அண்டை, மதம், புருவத்தை வளை, மயிர்ச்சுருள்
பர = விரி,பரவு,மற்ற
பற = பற(த்தல்)
பரவை = கடல், செவி வழக்கு, சுந்தரமூர்த்தியின் முதல் மனைவியின் பெயர்
பறவை = பட்சி
பரம்பு = பரவு, அடி (பரம்படித்தல் - உழுத நிலத்தைச் சமப்படுத்துதல்)
பறம்பு = பாரியின் மலை
பரி = இரங்கு, வருந்து, விரும்பு, அன்புகூர், ஓடு, ஒரு முன்னெட்டு, குதிரை
பறி = பிடுங்கு, அபகரி, தோண்டு, வலை, தோண்டல், பொன்
பரை = பார்வதி
பறை = சொல், மேளம், ஒரு குலம்
பாரை = கம்பி
பாறை = பெருங்கல், கல்நிலம்
பிர = ஒரு வடமொழி உபசர்க்கம்
பிற = தோன்று, உண்டாகு, மற்ற
பிரை = புளித்த மோர்
பிறை = குறைச்சந்திரன், சந்திரன்கலை
புரம் = ஊர், நகர், காப்பு
புறம் = பக்கம், முதுகு, பின்பு, வெளி, புறப்பொருள்
புரவு = காப்பு, ஆட்சி
புறவு = முல்லை நிலம், புறம்போக்கு, புறா
பெரு = பெரிய
பெறு = அடை, பிள்ளைபெறு, விலைபெறு, மதிப்புப்பெறு
பொரி = தானியம் வறு, பொரிபோலெழும்பு, தீ, வறுத்த தானியம்
பொறி = தீட்டு, எழுது, செதுக்கு, தீத்துகள், எழுத்து, புலனுறுப்பு, இயந்திரம், பிடிகருவி
பொரு = ஒப்பாகு, பொருத்து, போர் செய்
பொறு = சும, சகி, காத்திரு
பொருக்கு = சோற்று வடு
பொறுக்கு = ஒவ்வொன்றாயெடு, தெரிந்தெடு
பொருப்பு = மாலை
பொறுப்பு = உத்தரவாதம்
மர = கடினமாகு, உணர்ச்சியறு, மரத்தாலான
மற = நினைவறு, மறக்குல, வீர
மரம் = விருட்சம்
மறம் = வீரம், பாவம், ஒரு குலம்
மரல் = ஒரு பூண்டு
மறல் = வீரம், பாவம், சினம்
மரி = இற
மறி = தடு, மடக்கு, திரும்பு, ஒரு வகை ஆடு, சில விலங்குகளின் பெண்பால்
மரு = பொருத்து, வாசனை, ஒரு பூண்டு, மணமகனுக்குப் பெண் விருந்து வீட்டில் செய்யும் முதல் விருந்து
மறு = மறு(த்தல்),குற்றம், களங்கம், மற்ற
மருகு = மருக்கொழுந்து
மறுகு = மயக்கு, வீதி
மரை = ஒரு வகை மான், விளக்குக்காய், திருகுச்சுரை, தாமரை
மறை = ஒளி, ஒளிவு, இரகசியம், வேதம், மறுத்தல்
மாரன் = மன்மதன்
மாறன் = பாண்டியன், பகைவன்
முருகு = வாசனை, இளமை, அழகு, முருகன், ஒரு காதணி
முறுகு = திருகு, பதங்கடந்து வேகு
முருக்கு = ஒரு மரம்
முறுக்கு = திருகு, அதட்டு, அச்சுறுத்து, ஆரவாரி, திருக்கு, ஒரு பலகாரம்
வரம் = வரம்
வறம் = வறட்சி
வரை = வரை(தல்), நீக்கு, பொருந்து, வரி, கணு, மூங்கில்,மலை, அளவு
வறை = பொறித்த காய்கறி
விரகு = தந்திரம்
விறகு = எரிக்குங்கட்டை
விரல் = விரல்
விறல் = வெற்றி, வல்லமை, மெய்ப்பாடு, சமத்துவம்
விரை = விதை,வேகமாகு
விறை = கடினமாகு, நீள், இறந்துடம்பு நீள், குளிரால் நடுங்கு
வெரு = அச்சம்
வெறு = பகை, நிரம்பு, ஒன்றுமில்லாத, தனியான
நன்றி: மு. தேவநேயப்பாவாணர் எழுதிய உரைநடை இலக்கணமும் கட்டுரை எழுதும் முறையும் என்ற நூலில் இருந்து தொகுத்து தமிழ் மன்றத்தில் பகிர்ந்திருக்கும் பாரதிக்கு மனமார்ந்த நன்றிகள்
மிகவும் அருமையான தொகுப்பு... நன்றி...
பதிலளிநீக்குபதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...
வணக்கம் தனபாலன் சார் !
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்
வாழ்கவளமுடன்
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிகள் !
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வணக்கம் சீராளன்!
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
தந்தையாம் வள்ளலார் சிந்தனை உள்ளமேற்றி
விந்தையொடு தந்தீர் வியந்து!
மிக அருமையான அவசியமான தொகுப்பு!
வளரட்டும் உங்கள் தொண்டு!..
வாழ்த்துக்கள் சகோ!
வணக்கம் சகோ !
நீக்குதங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஈரடி வெண்பாவில் ஈன்றகவி என்னுள்ளே
சீரமைத்து சேர்க்கும் சிறப்பு !
வாழ்த்துக்கள் சகோ வாழ்கவளமுடன்
வணக்கம் !
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
விறல் மிக விரைத்திட்ட சொற்கள் தகும்
உரு தர விரிவுறும்.
ஆஹா இது நல்ல யோசனை பயன் படும் அனைவருக்கும். மிக்க மகிழ்ச்சி.
நன்றி ....! தொடர வாழ்த்துக்கள்
இனிய வணக்கம் சகோ இனியா !
நீக்குதங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
படித்து பயன் பெறுங்கள்
வாழ்க வளமுடன்
அண்ணா அருமையான பதிவு... தொடருங்கள் என்னை போன்றவர்களுக்கு மிகவும் உதவும்... :)
பதிலளிநீக்குஇனிய வணக்கம் சகோ பிரியா !
நீக்குதங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
படித்து பயன் பெறுங்கள்
வாழ்க வளமுடன்
என் மகனின் 6 ஆம் தமிழ் ஒப்படைப்பு செய்ய மிகவும் உதவியாக இருந்தது. மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வளம்பெற்று வாழட்டும் வரும் தலைமுறை
நீக்கு