நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

வடசொற்களும் - தமிழ் சொற்களும்

அழகிய தமிழ் 
=========

வடசொல்  - தமிழ்சொல் 
    =================

அபூர்வம் -  அருமை
அவகாசம் - ஓய்வு
அவசரம் - விரைவு
அவசியம் - தேவை
அவயவம் - உறுப்பு
ஆகாயம் - வானம்
ஆபத்து - துன்பம்
ஆன்மா - உயிர்
இராகம் - பண்
இரத்தம் - குருதி


இலக்கம் - எண்
உபத்திரவம் - வேதனை
ஐக்கியம் - ஒற்றுமை
கஷ்டம் - தொல்லை
கல்யாணம் - திருமணம்
கிரயம் - விலை
குதூகலம் - எக்களிப்பு
கோஷ்டி - குழாம்
சக்தி - ஆற்றல்
சகஜம் - வழக்கம்

சக்கரவர்த்தி - பேரரசன்
சந்தேகம் - ஐயம்
சபதம் - சூள்
சந்தோஷம் - மகிழ்ச்சி
சமீபம் - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி - வழித்தோன்றல்
சிகிச்சை - மருத்துவமுறை
சந்தர்ப்பம் - வாய்ப்பு

சம்பிரதாயம் - தொன்மரபு
சாபம் - கெடுமொழி
சாதாரண - எளிதான
சாட்சி - சான்று
சிங்காசனம் - அரியணை
சிநேகம் - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம் - விடுதலை
சுயராஜ்யம் - தன்னாட்சி
சுபாவம் - இயல்பு

சேவை - தொண்டு
சேஷ்டை - குறும்பு
சௌகரியம் - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம் - வேட்கை
தேதி - நாள்
திருப்தி - உள நிறைவு
நஷ்டம் - இழப்பு
நிபுணர் - வல்லுநர்
நியாயஸ்தலம் - வழக்கு மன்றம்

நீதி - நன்னெறி
பகிரங்கம் - வெளிப்படை
பரிகாசம் - நகையாடல்
பத்தினி - கற்பணங்கு
பத்திரிக்கை - இதழ்
பரீட்சை - தேர்வு
பந்துக்கள் - உறவினர்கள்
பாரம் - சுமை
பாஷை - மொழி
பிரசாரம் - பரப்புவேலை, பரப்புரை

பூர்வம் - முந்திய
மரணம் - சாவு, இறப்பு
மாமிசம் - இறைச்சி
மிருகம் - விலங்கு
முகூர்த்தம் - நல்வேளை
மோசம் - கேடு
யந்திரம் - பொறி
யாகம் - வேள்வி
யுத்தம் - போர்
ரகசியம் - மறைபொருள், குட்டு, பூடகம்

ருசி - சுவை
லாபம் - மிகை ஊதியம்
வருஷம் - ஆண்டு
வாகனம் - ஊர்தி
வாதம் - சொற்போர், சொல்லாடல்
வாந்தி பேதி - கக்கல் கழிச்சல்
வாலிபர் - இளைஞர்
விஷயம் - பொருள், செய்தி
விபத்து - துன்ப நிகழ்ச்சி
விவாகம் - திருமணம்
வீரம் - மறம்

வேகம் - விரைவு
ஜனங்கள் - மக்கள்
ஜயம் - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம் - பிறவி
ஸ்தாபனம் - நிலையம், அமைப்பு
உக்கிரம் - கடுமை
உச்சரிப்பு - ஒலிப்பு
உத்தரம் - வடக்கு
உத்தரவாதம் - உறுதி,பொறுப்புறுதி

உத்தரவு - ஆணை
உத்தேசம் - குத்துமதிப்பு
உத்தியோகம் - அலுவல்
உத்தியோகபூர்வ் - அரசமுறை
உதயம் - எழுதல், காலை
உதாசீனம் - புறக்கணிப்பு
உதாரணம் - எடுத்துக்காட்டு
உதிரம் - குருதி
உபகரணம் - துணைக்கருவி
உபகாரம் - உதவி

உபத்ரவம் - ஊறு,தொந்தரவு
உபதேசம் - அறிவுரை
உபரி - மிகை
உபயோகம் - பயன்
உபாயம் - வழி
உற்சவம் - விழா
உற்சாகம் - விறுவிறுப்பு,ஊக்கம்
உல்லாசம் - உவகை
உஷார் - விழிப்பு
ஊர்ஜிதம் - உறுதி

ஊனம் - (உறுப்புக்)குறைபாடு
எச(ஜ)மான் - முதலாளி
எதார்த்தம் - உண்மை,நடப்பியம்
எதேச்சை - தன்விருப்பம்
ஏகமனதாய் - ஒருமனதாய் 
ஏகோபித்து - ஒன்றுபட்டு

ஐக்கியம் - ஒற்றுமை

நன்றி: www.sankamam.com


இந்த தமிழ்ச்சொற்களை முழுதாக பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்த முடியாவிட்டலும், சிறிது முயற்சி செய்தாலும் நல்லது தானே!

9 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பு... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் தனபாலன் சார் .!

      தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. இனிய பொங்கல்-புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    நல்லதொரு தொகுப்பு.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் பிரியசகி !

      தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
      இனிய நல்வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. பயன் படும் தொகுப்பு என் போன்றோருக்கு.
    என்றும் இன்பம் பொங்கி வாழ இப் பொங்கல் திருநாளில் மனமார வாழ்த்துகிறேன்.....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் இனியா !

      தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
      இனிய நல்வாழ்த்துக்கள்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. சிறந்த முயற்ச்சி அண்ணா... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய வணக்கம் தங்கை பிரியா !

      தங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்கிறேன் நன்றி
      படித்து பயன் பெறுங்கள்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  5. மிக அருமை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு