சின்ன பொண்ணு உன்னிடம்
சிந்தும் வார்த்தை ஔடதம்
வண்ண வண்ண சிரிப்பினால்
வாழ்வு கூட சௌக்கியம் !
உரிக்க உரிக்க வெங்காயம்
உன்னை அழ செய்திடும்
சிரித்து சிரித்து பேசினால்
சிந்தை தெளிவு ஆகிடும் !
மண்ணில் பூக்கள் வளர்க்கலாம்
மகிழ்ந்து தண்ணீர் ஊற்றலாம்
உன்னைப் போல பூக்களும்
ஒளிந்திருந்து சிரிக்குமே !
பட்டாம் பூச்சி பிடிக்காதே
பாவம் அதுக்கு வலித்திடும்
திட்டம் இட்டு வாழலாம்
தீயார் உறவை தவிர்க்கலாம்..!
மானைப்போல துள்ளி நீ
மகிழ்ச்சி பொங்க ஓடினால்
தேனீ போல உன்னிடம்
தேகக் களைப்பு மாறலாம் !
பாட்டி சொல்லும் பாட்டுக்கள்
பாசத்தோடு கேளுங்கள்
ஊட்டி ஊட்டி தருகின்ற
உணவில் அன்பை பேணுங்கள் !
வானில் மின்னும் தாரகை
வண்ண ஒளி தெளிக்குமே
தேனைப் போல பேசினால்
தேகம் எல்லாம் இனிக்குமே !
பிரியமுடன் சீராளன்
பட்டாம் பூச்சி பிடிக்காதே
பதிலளிநீக்குபாவம் அதுக்கு வலித்திடும்
திட்டம் இட்டு வாழலாம்
தீயார் உறவை தவிர்க்கலாம்..!
ஆமால்ல... எவ்வளவு மென்மையான மனம். ம்..ம்..ம்..மேன் மக்களுக்குரிய இக் குணங்கள் .பொருந்திடும் உமக்கே ! அழகான சிட்டும் கவிதையும் அபாரம். பட்டுக்குட்டி so cute
வாழ்க வளமுடன் என்றும் ...!
அன்பின் மிகுதியில் அள்ளித் தெளித்தவரி
நீக்குஇன்புற வைக்கும் இனி !
மிக்க நன்றி இனியா வாழ்க வளமுடன்
அன்பரே! வணக்கம்.
பதிலளிநீக்குசகோதரி இளமதிக்கு நீங்கள் எழுதியிருந்த வாழ்த்துப்பாவின் நேர்த்தி இங்கு என்னை அழைத்து வந்துவிட்டது. அருமையாகவும் அருமைத்தமிழிலும் எழுதுகிறீர்கள். எடுத்து இடுவனவும் அரிய, தேவையான தமிழ்சார் செய்திகளே. தொடர்ந்து எழுதுங்கள். உங்களைப் போல எளிமையான-நல்ல தமிழ்ப்படைப்புகள் தான் இணையத்தமிழில் ஏராளமாய்்பபறக்கும் குப்பைகளை அகற்ற முடியும். (ஃபாலோயரில் தொடரமுடியவில்லையே ஏன்? எதுவும் பூட்டப்பட்டதா? பாருங்கள்.) நன்றி மீள முயல்வேன்
வணக்கம் முத்து நிலவன் !
நீக்குதங்கள் முதல் வருகைக்கு என் வந்தனங்கள்
கண்டிப்பாக எழுதுகிறேன் முடிந்தவரை தமிழன்னைக்கு சேவை செய்வோம் சரிதானே
எல்லோரும் பின்தொடரும்படிதான் அமைப்பில் மாற்றங்கள் செய்திருக்கிறேன் தாங்கள் இணைய முடியாமைக்கு வருந்துகிறேன் முயற்சி பண்ணுங்கள் முடியும் ஓகே வா !
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
அய்யோ சீராளரே என்னுயிரைத் தொடர்ந்து கொண்டிருந்ததால் இதைப் பார்க்கவில்லை.
பதிலளிநீக்குமுத்து நிலவன் அய்யா சொல்லியது போல எளிமையின் இனிமை தங்கள் பாடல்களில் தவழ்கிறது.
கடுமையின் கொடுமையில் நான் சிக்கிய பதிவு
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
நேரமிருக்கும் பொழுது கண்டு கருத்திடத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
நன்றி