நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 22 ஏப்ரல், 2015

சிந்திப் போமா ..?



எதுஇல்லை இவ்வுலகில் ஏக்கம் கொள்ள
         ஏழ்மைக்கும் வாழ்வுண்டு ! இச்சை பூக்கும்
மதுவில்லா இல்லத்தில்  மக்கட்  செல்வம்
         மகிழ்ந்திருக்கும் மனைமாட்சி மேன்மை கொள்ளும்
புதுமைகளை பூக்கின்ற  விஞ்ஞா னங்கள்
         புத்துலகில்  சாதிவகை அறுக்கும் !ஆன்றோர் 
முதுமொழிகள் கற்றுமனப் பாரம் போக்கின்
         முக்கனிபோல் வாழ்வினிக்கும் ஏற்றம் கொள்ளும் !


விதியென்னும் வார்த்தைகளும் வீணே மண்ணில்
          வெற்றிகளும் பெற்றிடலாம் விவேகம் கொள்ளின்
சதிகாரன் என்றெவரும் பிறப்பில் இல்லை
          சந்தர்ப்பம் மாற்றிவிடும்  தன்னைக் காக்க
மதியுள்ளோர் உலகத்தின் மாயம் போக்கும்
          மருந்தாவர் மடமைகளும் அழித்தே செல்வர்
எதிர்நீச்சல் போடுபவன் ஏற்றம் கொள்வான்
          ஏக்கங்கள் தனையழித்தே வாழ்வை வெல்வான் !

மணமாகிக் கொண்டோரும் மனதை கொல்லும்
           மயக்கத்தில் விழைகின்றார் மாற்றான் வீட்டில்
பிணந்தின்னிக் காமுகராய்ப் பிஞ்சைக் கூடப்
           பிழிகின்ற செயலாற்றல் ! தகுமோ  மண்ணில் ?
உணர்வில்லா மாந்தர்களாய்ப் பிறக்கும் போதும்
           உயிரூட்டி வளர்க்கின்ற தாயைப் போற்றி
வணங்கிட்டால் வாழ்வுயரும் வன்மம் போகும்
           வருங்காலம் சிறப்பாகும்  மாற்றம் கொள்ளும்  !

முத்தொளிரும் பூமியிலே மூர்க்கம் இன்றி 
          முப்பொழுதும் வாழ்ந்திடலாம் ! உலகம் போற்றும்
உத்தமராய் வாழ்ந்தோரின் உள்ளம் போன்று
           உணர்வுகளைக் கொண்டிருந்தால் உயரும் வாழ்வு
இத்தரையில் எல்லாமே இறப்பைக் காணும்
           என்றுணர்ந்தால் அகம்பாவம் தானே போகும்
செத்தழியும் மானிடத்தின் செல்வம் எல்லாம்
            சுடுகாடு வரைதானே சிந்திப் போமா ?


பிரியமுடன் சீராளன்

29 கருத்துகள்:

  1. அடேங்கப்பா எத்தனை தத்துவங்கள் நெஞ்சில்.ம்..ம்..ம்..ம் மீண்டும் வருகிறேன் .......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் வருவாய் மிகமகிழ்ச்சி தந்திடுவாய்
      வேண்டிக் கிடப்பேன் விளித்து !

      மிக்க நன்றி சகோ இனியா தங்கள் முதல்வருகைக்கு என் வந்தனங்கள்

      நீக்கு
    2. பிணந்தின்னிக் காமுகராய்ப் பிஞ்சைக் கூடப்
      பிழிகின்ற செயலாற்றல் ! தகுமோ மண்ணில் ?மிகவும் அருமை . மனமார்ந்த வாழ்த்துகள் .

      நீக்கு
    3. வணக்கம் சரா பாஸ்கரன் !

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

      நீக்கு
    4. இத்தரையில் எல்லாமே இறப்பைக காணும் என்றுணர்ந்தால் அகம்பாவம் தானே போகும் - அரிய தத்துவம் மிக அருமை

      நீக்கு
  2. தத்துவங்கள் எத்தனை உன்தவிக்கும் நெஞ்சில்
    தவிடுபொடி ஆகும் துயர்நீ நினைவிற்கொள்
    முத்துக்கள் தாம்முழுதும் முன்னோரின் சொத்துக்கள்
    தித்திக்கும் தேன்எனக்கொள் வேன் !


    உத்தம எண்ணம் கலந்திருக் குன்உயிரில்
    மெத்தப் படித்தோர்க்கும் செத்தாலும் வாராது
    இத்தகைய சிந்தையே புத்தம் புதுஉணர்வு
    நித்தம் பெறுவாய் தினம் !

    அருமை அருமை! எவ்வளவு உணர்வு பூர்வமான சிந்தனைகள் மெய் சிலிர்கும்படியாய். எத்தனை அற்புதமான ஆழமான கருத்துக்கள் ஒவ்வொன்றும் அத்தனையும் ரசித்தேன் . தொடர்ந்து எழுதுங்கள். காத்திருக்கிறோம் ஆவலுடன் பொருள் பொதிந்த கவிதைக்காய். மிக்க நன்றி பதிவுக்கு மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. அன்புமொழி ஊட்டி அரவணைக்கும் தாயன்பை
      என்றும் தருகின்றாய் ஏந்திழையே - உன்னினிய
      வாழ்த்தில் உயர்வடைந்து வாசமுறும் ! நெஞ்சத்தைச்
      சூழ்ந்திருக்கும் அன்பைச் சுமந்து !

      மிக்க நன்றி சகோ இனியா தங்கள் கருத்துக்கும் வாழ்
      த்துக்கும் வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. கட்டறுத்துப் பாய்ந்ந்து வரும் கவிதை ஓடை
    கருபட்ட உயிர்கூட்டின் கதைகள் சொல்லும்!
    சுட்டெரித்துப் போமுடலச் சருகைக் காத்துச்
    சுகம்வாழ பிறரழிக்கும் அவலம் எள்ளும்!
    பட்டறியும் முன்தடுக்கும் பாதை யாகும்
    பாவலநின் பாவலிமை! படிக்கும் உள்ளம்
    கொட்டுகின்ற தேன்கொடுக்கே! தேள்கள் எங்கே?
    கொள்ளுமுன் கவியால்தம் கொள்கை மாற்றும்.!

    அருமை கவிஞரே!

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஊமைக் கனவுகள் தங்களுக்கு முன்னால் நானெல்லாம் சாதாரணம் இப்படி ஒரு கருத்திட்டால் பதிலுரைக்க வார்த்தைகள் எங்கே தேடுவேன் இலக்கிய இலக்கண செம்மல் நீங்களாயிற்றே அதனால் வெண்பாவில் பதிலெழுத முடியவில்லை !

      மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. தங்களின் இந்தத் தளத்துடன் இணைந்து கொள்ள முடியவில்லை மீண்டும் முயற்சித்துப் பார்க்கின்றேன் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோ !

      முத்துநிலவன் ஐயாவும் ஒருமுறை இப்படித்தான் சொன்னார் நான் முயற்சித்து பார்த்தேன் எல்லாம் சரியாத்தான் இருந்தது இப்போ நீங்களும் சொல்லிட்டீங்க அதனால் இன்னோர் இணைப்பு மேலுக்கு இட்டிருக்கின்றேன் அதனில் நான் இணைந்து பார்த்தேன் ,,,இப்போ எல்லாம் சரியாகிவிட்டது இணைந்துவிடுங்கள் தங்கள் அன்புக்கு மிக்க நன்றி
      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

      நீக்கு
  5. முதுமொழிகள் கற்றுமனப் பாரம் போக்கின்
    முக்கனிபோல் வாழ்வினிக்கும் ஏற்றம் கொள்ளும்!

    எதிர்நீச்சல் போடுபவன் ஏற்றம் கொள்வான்
    ஏக்கங்கள் தனையழித்தே வாழ்வை வெல்வான்!

    என்று நன்றே சிந்திக்க வைக்கிறியள்

    சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்திக்க வைக்கின்ற சீர்கவிகள் எல்லாமே
      சந்ததிக்காய் ஆற்றும் கடன் !

      மிக்க நன்றி ஐயா தங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

      நீக்கு
  6. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  7. அருமை . நல்லதொரு நெறியினை உணர்த்தும் கவிதை. ஆயினும் அதன்வ்பளி நடக்கும் அறிவாளிகளா நாம் ?//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லநெறி தந்திங்கே நற்தமிழைக் காத்திடுவேன்
      வல்ல கவியில் வடித்து !

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. கவிதை மிக அருமை. தொடருங்கள் நானும் உங்கள் தளத்தை தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமைக் கவியில் அளித்திட்டேன் மெய்யை
      உருக்கிப் படித்தால் உயர்வு !

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
  10. தங்கள் தளம் என் வருகை இது முதல் முறை. கவிஞரே கவி அருமை. வாழ்த்துக்கள். இனி தொடர்வேன்,தாங்களும் பாலமகிபக்கங்கள் வந்து செல்லவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ
      வாழ்க வளமுடன் !

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே.

    தாங்கள் அருமையாக சிந்தித்து எழுதிய கவி கண்டு படித்து ரசித்து மகிழ்ந்தேன்.மிகவும் நன்றாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    என்தளம் வந்து வாழ்த்துரைத்து கருத்திட்ட தங்களுக்கு என் பணிவான நன்றிகள். இனியும் தொடர்ந்து வந்து ஊக்கமளிக்க வேண்டுகிறேன். நானும் தங்கள் தளத்தை நன்றியுடன் தொடர்கிறேன்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்களின் வலைக்கும் வருகிறேன்
      வாழ்க வளமுடன்

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம் கில்லர்ஜி !

      மழையின் தூறல்கள் சேர்ந்த அருவிதான் நண்பரே

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
  13. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ !

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வாழ்க வளமுடன்

      நீக்கு
  14. கவிதை அருமையாக இருக்கு ஆற்றுப்படுத்தல் வரிகள் கவர்ந்தவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன்

      நீக்கு