நேரங்களை முந்திச்செல்லும் மானுட பூமியில் பூக்கள் மீதும் நெருப்பெரியும் அக்கினிப் பயணங்களில் தவறவிடப்பட்ட சில சுவடுகளின் அழியா ரேகைகள் இங்கே பதியபடுகின்றன ! வாழட்டும் தலைமுறை ....! !..........பிரியமுடன் சீராளன்
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வெள்ளி, 13 நவம்பர், 2015

அழகே தமிழே எனதுயிரே !

          
(அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )
             =========================


தன்னுயிர் போகும் போதும்
       தண்டமிழ் பாடும் மாந்தர்
பொன்னுடல் எரியும் போதும்
       பூந்தமிழ் வாசம் வீசும்!
என்னுயிர் சுமக்கும் கூட்டில்
       இருந்திடும் ஆசை கோடி!
தொன்மையாம் தமிழைப் பாடிச்
        சூழ்புகழ் காண வேண்டும் !

சுந்தரத் தமிழே உன்னைச்
        சுமந்திடும் என்றன் நாவில்
மந்திரச்  சொல்லாய் நாளும்
        மகிழ்நிறை வாக்க வேண்டும்!
சிந்துரம் இட்டே நெற்றி
        சிறப்புறும்  மாந்தர் போன்றே
வந்தருள் செய்வாய் தாயே!
        வளமெலாம் சேர்ப்பாய் நீயே!

கற்றறிந் துலவும் மாந்தர்
        காரிகை நன்னூல் தம்மால்
பெற்றறிந் தோங்கும் வண்ணம்
        பிழையறக்  காப்பாய் அம்மா!  
மற்றறி வோங்க செய்தே
        மன்பதை வெல்ல வைப்பாய்!
சிற்றறி வழித்தே தூய
        செந்நெறி ஊட்டு வாயே!

எந்தையும் தாயும் போலும்
        இணையிலா மக்கள் போலும்
விந்தையாம் உலகைக் காக்கும்
        வேதியன்  அருளைப் போலும்
சிந்தையில் தோன்றும் எல்லாம்
        செழிப்புற வேண்டும் தாயே!
அந்தமிழ்  அமுதை ஊட்டி
        அவனியில் என்னைக் காப்பாய்!

பிரியமுடன் சீராளன்

13 கருத்துகள்:

  1. சுந்தரத் தமிழே உன்னைச்
    சுமந்திடும் என்றன் நாவில்
    மந்திரச் சொல்லாய் நாளும்
    மகிழ்நிறை வாக்க வேண்டும்

    மிகவும் ரசித்த வரிகள் நன்று கவிஞரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கில்லர் ஜி !

      உடன் வந்து கருத்திட்டமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்

      நீக்கு
  2. தமிழுக்கு தாங்கள் எழுதிய அருட்பா அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவி நாகா தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

      நீக்கு
  3. சுந்தரத் தமிழே உன்னைச்
    .......சுமந்திடும் என்றன் நாவில்
    மந்திரச் சொல்லாய் நாளும்
    .......மகிழ்நிறை வாக்க வேண்டும்! சிந்துரம் இட்டே நெற்றி சங்கத் தமிழ் ஆண்டு வெல்லும் - அழகுத் தமிழ் விருத்தம் அருமை வாழ்க நீவிர்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவிஞரே தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

      நீக்கு
  4. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி ஐயா தங்களின் வரவும் கருத்தும் கண்டு மிக மகிழ்கிறேன் வாழ்க வளமுடன்

      நீக்கு
  5. சுந்தரத் தமிழே உன்னைச்
    சுமந்திடும் என்றன் நாவில்
    மந்திரச் சொல்லாய் நாளும்
    மகிழ்நிறை வாக்க வேண்டும்!

    அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நிஷா !

      தங்கள் முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

      நீக்கு
  6. அழகிய தமிழே என்றும் அழகு.அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி !

      தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்க வளமுடன் !

      நீக்கு